மதுரையில் அரசுப் பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்து விபத்துக்குள்ளானது.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை புறநகர் பகுதிகளுக்கு நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து கொண்டயம்பட்டி நோக்கி 69 A வழித்தட எண் கொண்ட அரசு மகளிர் இலவச பேருந்து பயணிகளுடன் அரசரடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் பின்பக்க படிக்கட்டு திடீரென உடைந்து விபத்துக்குள்ளான நிலையில் படிக்கட்டில் பயணித்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். பின்னர் அதில் பயணித்தவர்களை மாற்று பேருந்து ஏற்பாடு செய்து நடத்துநர் அனுப்பி வைத்துள்ளார்.
இதனிடையே பேருந்தை சுதாரித்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு படியில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.