வெற்றியும் தோல்வியும் ஓர் இரட்டைப் பாதை...! – மனு பாக்கரின் பெருமிதக் கூற்று என்ன தெரியுமா...?
Seithipunal Tamil November 19, 2025 07:48 PM

பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு கனகமான பதக்கங்களை வென்று இந்திய விளையாட்டுத் துறையின் புதிய வரலாறு எழுதித்தந்த துப்பாக்கி சுடுதல் நட்சத்திரம் மனு பாக்கர், எகிப்தில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் எதிர்பாராத விதமாக பதக்கம் தவறியுள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் தன் அனுபவத்தை பகிர்ந்த மனு பாக்கர் தெரிவித்ததாவது,"இந்த உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு பதக்கம் வெல்வது தான் என் முக்கிய இலக்கு.

எனது ஷூட்டிங் செயல்திறன் நன்றாகவே இருந்தது; தேவையான மதிப்பெண்களும் எடுத்தேன். இருந்தாலும், பதக்க மேடைக்கு ஏற இயலவில்லை.நமது அணியில் இருக்கும் இஷா சிங் இந்த முறை பதக்கம் வென்றார்.

விளையாட்டுலகில் தினமும் மேடையை அடைய முடியாது; சில நாட்களில் வெற்றி, சில நாட்களில் தோல்வி, இது சாதாரணம்.என்னைப் பொறுத்தவரை ‘நான் மட்டுமே வெற்றிபெற வேண்டும்’ என்ற எண்ணமே இல்லை.

இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்தால் அதுவே எனக்கு சந்தோஷம். அந்தப் பதக்கத்தை யார் வென்றாலும், நான் மனமாறா வாழ்த்துவேன்” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.