ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...
WEBDUNIA TAMIL November 19, 2025 08:48 PM

kamal


நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக பல வருடங்கள் அறிவித்து பின்வாங்கிய நிலையில் அவரின் நண்பரும் சக நடிகருமான கமல் மக்கள் நீதி மையம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி திடீரென அரசியலுக்கு வந்து எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தார்
. மையம் என்றால் எல்லாவற்றிலும் மையமாக செயல்படுவது. இந்த பக்கமும் செல்லாமல் அந்த பக்கமும் செல்லாமல் நடுநிலை வகிப்பது என விளக்கமளித்தார் கமல்.

துவக்கத்தில் திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். ஒரு கட்டத்தில் திமுகவையும் கடுமையாக விமர்சிக்க துவங்கினார். டிவியில் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் ஒரு காட்சியை பார்த்துவிட்டு தன் கையில் வைத்திருக்கும் டார்ச் லைட்டை தூக்கி எறிந்து டிவியை உடைப்பது போல வீடியோ எல்லாம் வெளியிட்டார்.

‘எத்தனை நாட்கள் இவர்கள் ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்|’ என்றெல்லாம் பேசினார். மக்கள் நீதி மையத்திற்கு மக்களிடம் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. அவரின் அந்த கட்சியில் போட்டியிட்ட யாரும் சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கோவையில் கமலே தோற்றுப் போனார்.

அதன்பின் திமுகவிடம் நெருக்கம் காட்டு தொடங்கினார் கமல். அதன் விளைவாக இப்போது அவருக்கு எம்.பி பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. மு.க.ஸ்டாலின் தொடர்பான விழாக்களிலும் அவர் கலந்து கொள்கிறார். கமலின் பிறந்த நாளன்று முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தோடு கமலின் வீட்டுகு சென்று வாழ்த்தினார்.

இந்நிலையில் ஒரு விழாவில் பேசிய கமல் ‘ரிமோட்டெல்லாம் தூக்கிப்போட்டு டிவிய உடைச்சீங்களே.. ஏன் இப்ப திமுகவோட கூட்டணி வைத்தீர்கள்? என்று நிறைய பேர் கேக்குறாங்க..அந்த ரிமோட்டதான் வேற ஒருத்தன் தூக்கிட்டு போயிட்டானே!.. அது எப்பவும் நம்ம ஸ்டேட்லதான் இருக்கணும். அதை தடுக்கதான் இணைந்தோம். இது புரிஞ்சா புரிஞ்சுக்கோங்க.. இல்லன்னா சும்மா இருங்க.. புரிஞ்சிக்க வேண்டாம்னா மாற்று அரசியல் என்பது ஒரு பாசிசம்’ என பேசியிருக்கிறார் கமல்.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.