மனைவி மீது சந்தேகம் கொண்டதால் லாரி டிரைவரை மனைவி அடித்து கொன்ற சம்பவம் திருவண்ணாமலையில் அரங்கேறியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த இடையங்குளத்தூர் கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி மகன் விஜய் (27). இவர் அதே ஊரை சேர்ந்த சர்மிளா என்பவரை கடந்த 5 வருடம் முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அன்சிகா(4), ஆதிஷ் (3) என 2 குழந்தைகள் உள்ளனர். விஜய் லாரி டிரைவர் என்பதால் வேலைக்கு சென்றால் 10 நாள் 15 நாள் கழித்து வீட்டுக்கு வருவது வழக்கம். அப்போது அக்கம்பக்கத்தினர் பலவாறு பேசுவதால் விஜய் மனைவி ஷர்மிளாவை சந்தேகத்தில் அடித்து உதைப்பது வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு விஜய் மனைவி ஷர்மிளாவுடன் சண்டை போட்டார். அப்போது சர்மிளாவின் அம்மா ராணி பாத்திமா உடன் இருந்தார். இதில் விஜயை மனைவி ஷர்மிளா, மாமியார் ராணி பாத்திமா ஆகிய இருவரும் கம்பியாலும் கட்டையாலும் தாக்கினர். இதில் விஜய் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் மனைவியும் மாமியாரும் விஜய் கழுத்தில் கயிறு கட்டி அருகில் உள்ள ஜன்னலில் இழுத்து மாட்டி உள்ளனர். விஜய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்து போளூர் டிஎஸ்பி மனோகரன் நேரில் வந்து விஜய் பிரேதத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மனைவி சர்மிளா, மாமியார் ராணி பாத்திமா ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் இடையங்கொளத்தூர் கிராமத்தில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.