ஆட்சி அதிகாரத்தில் விசிக பங்கு கேட்குமா?- ரவிக்குமார் எம்பி பரபரப்பு பேட்டி
Top Tamil News November 19, 2025 11:48 PM

வரவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் விசிக பங்கு கேட்காது என விழுப்புரம் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் பொதுத்தேர்வுக்கு படிக்க வரும் தேர்வர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் கட்டப்பட்ட நூலக கூடுதல் கட்டிடத்தை விழுப்புரம் எம் பி ரவிக்குமார் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி ரவிக்குமார், தமிழகத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கை துவங்கப்பட்டு படிவங்கள் வழங்கப்பட்டு வருவதில் விழுப்புரம் மாவட்டத்தில் 6 சதவிகிதம் மக்களுக்கு படிவம் கொடுக்க முடியாத நிலை உள்ளதாகவும், படிவங்கள் பூர்த்தி செய்வதில் அரசு ஊழியர்கள் பெண்கள் இரவு வரை பணி செய்ய வேண்டிய நிலை உள்ளதால் கடுமையான அழுத்தத்தில் பணி செய்ய வேண்டிய நிலை உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

எஸ்ஐஆரை எதிர்த்து பணிச்சுமை அதிகமாக உள்ளதாக தெரிவித்து வருவாய் துறையினர் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அவர்களின் வேலை நிறுத்தத்திற்கு சம்பளம் பிடித்தம் செய்யபடும் என தலைமை செயலர் அறிவித்துள்ளது நீதியானது அல்ல அறப்போராட்டத்திற்கு தண்டனை விதிக்ககூடாது சம்பளம் பிடித்தம் செய்ய கூடாதென வலியுறுத்தினார். தேர்தல் ஆணையம் எஸ் ஐ ஆரை நிறுத்தி வைக்க வேண்டும் தேர்தல் முடிந்தவுடன் இதனை செய்ய வேண்டும் என்றும்,  பிரேமலதா 2026 ல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தெரிவிப்பது தேர்தல் நேரத்தில் எல்லோரும் தெரிவிக்கும் வழக்கமான ஆருடம் தான் மீண்டும் 2026 ல் திமுக மகத்தான வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும் அதனை பறிக்க வேண்டும் என்பதற்காக எஸ் ஐ ஆரை வைத்து பறித்து விடலாம் என கனவு காண்பதாக தெரிவித்தார். ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்பது 2026 ல் விசிகவிற்கு இல்லை திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என கூறினார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்போம் என்றும் பிரசாந் கிஷோருக்கு பீகாரில் என்ன நடந்ததோ அது தான் விஜய்க்கும் தமிழகத்தில் நடக்கும் என்று தெரிவித்தார். பீகாரில் முழு மதுவிலக்கு கொண்டு வந்த பிறகு குற்ற செயல்கள் குறைந்துள்ளதாகவும், இந்தியாவிலையே அதிக அளவு மது குடிப்போர் மாநிலமாக இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளதாகவும் அது போல 20 வயதிற்கு அதிகமான இளைஞர்கள் மது அருந்துவதால் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் அது தமிழகத்தில் நடைமுறைபடுத்துவது சாத்தியம் தான் என்றும் மதுவிலக்கினால்  ஏற்படும் வருவாய் இழப்பினை பீகார் சமாளிக்கும் போது தமிழகம் சமாளிக்கும் என கூறினார். தமிழத்தில் அனைத்து கட்சிகளும் 2026 தேர்தலில் மதுவிலக்கை கொண்டு வருவோம் என சொல்லவேண்டும் இதனை திமுகவிற்கும் விசிக சார்பில் வலியுறுத்துவோம் என எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.