சென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே பாஜக பிரமுகரான செந்தில் மீது நான்கு பேர் கொண்ட கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனிவாசன் நகரைச் சேர்ந்த 33 வயதான செந்தில், பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு பீர்க்கன்கரணை மண்டல செயலாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சுரங்கப்பாதை அருகே சென்றுக்கொண்டிருந்த செந்திலை திடீரென மற்றொரு பைக்கில் வந்த நால்வர் வழிமறித்தனர். பின்னர் பட்டா கத்திகளை ஏந்திய அவர்கள், செந்திலை ஓட ஓட பின்துரத்தி பலத்த காயங்களுக்கு உள்ளாக்கினர். அச்சமயம் அங்குதான் ரோந்து பணியில் இருந்த போலீசாரைக் கண்டதும் தாக்குதல் நடத்திய கும்பல் தப்பிச் சென்றது.
காயமடைந்த செந்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தைச் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி பதிவு முழுவதும் பதிவுசெய்திருப்பது இப்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துக்கான வழக்கை பதிவு செய்த போலீசார், தாக்குதல் நடத்திய கும்பலை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!