உத்தரபிரதேசம் மீரட் மாவட்டம் பல்லவ்புரம் ஃபேஸ்–1 பகுதியில், சுபாஷ் பன்சாலின் மகள்களின் பிறந்தநாள் விருந்தில் திருட்டு சம்பவம் ஒன்று நடந்தது. டெல்லி–டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த விருந்தில் உறவினர்கள், விருந்தினர்கள் என ஏராளம் கலந்து கொண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் சூட்–பூட் அணிந்த ஓர் அறிமுகமற்ற இளைஞன் நிகழ்வுக்குள் நுழைந்து, பரிசுகளுடன் வைக்கப்பட்டிருந்த நகைப் பொருட்களை கவனித்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்களில் வாய்ப்பைப் பயன்படுத்தி வைரம் பதிக்கப்பட்ட நெக்லஸை எடுத்துக் கொண்டு தனது கோட்டுக்குள் ஒளித்து கொண்டான். இந்த முழு சம்பவமும் ரிசார்ட்டின் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
நகையை எடுத்தவுடன், அந்த இளைஞன் ஓடி தப்பியதை கண்டு விருந்தினர்கள் பின்தொடர்ந்தாலும் பிடிக்க முடியவில்லை. தற்போது, வைரலான வீடியோவை அடிப்படையாகக் கொண்டு கங்கர்கேடா காவல் நிலையம் வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரை பிடிக்க இரண்டு சிறப்பு காவல் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக நகர காவல் கண்காணிப்பாளர் ஆயுஷ் விக்ரம் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!