குமுதா ஹேப்பி அண்ணாச்சி… இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் பார்ட் 2-ல் நடிக்கும் சாண்டி?
TV9 Tamil News November 20, 2025 03:48 AM

தமிழ் சினிமாவில் கடந்த 2-ம் தேதி அக்டோபர் மாதம் 2013-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம். இந்தப் படத்தை இயக்குநர் கோகுல் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் அஸ்வின், நந்திதா, சுவாதி, செல்மா எடித், பசுபதி, சூரி, டேனியல் போப், பட்டிமன்றம் ராஜா, பார்கவி ராதா, எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், வினோத் முன்னா, ராஜேந்திரன், மதுமிதா, ரோபோ சங்கர், சித்தார்த் விபின், தக்கலி, மகாநதி சங்கர், செந்தி குமாரி, சையத், சாய் பிரியங்கா ரூத், ராஜு சுந்தரம், ஜானி, நோபல் பால், வி.எஸ்.ராகவன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான சிம்ம தரிசனங்கள் மற்றும் ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக தயாரிப்பாளர்கள் வி.எஸ்.ராஜ்குமார் மற்றும் ஜே. சதீஷ் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலுன் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசைமைத்துள்ள நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல படல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பார்ட் 2-வில் நடிக்கும் சாண்டி:

இந்த நிலையில் ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. அதன்படி இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் சாண்டி நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… அனுபமா பரமேசுவரனின் லாக்டவுன் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

இவர் தொடர்ந்து வில்லன் கதாப்பாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்த நிலையில் இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. விஜய் சேதுபதிக்கு இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது போல சாண்டிக்கும் நல்ல வரவேற்பைப் ஏற்படுத்திக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… அந்த நடிகரோட டான்ஸ் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும் – நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.