நடிகர் அருண் விஜய் இன்று (நவம்பர் 19, 2025) தனது பிறந்தநாளை அர்த்தமுள்ள வகையில் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்துடன், சென்னை 'உதவும் கரங்கள்' ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் இணைந்து தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
இன்று காலை இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அருண் விஜய் அங்குள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்குத் தாமே உணவு பரிமாறி, அவர்களுடன் சேர்ந்து உணவு உட்கொண்டு ஒரு மறக்க முடியாத நேரத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் குழந்தைகளுடன் மிகுந்த நேரம் செலவிட்டு உரையாடியதுடன், அங்குள்ள முதியோர்களின் தினசரி நடவடிக்கைகள் குறித்தும், அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் பற்றியும் அக்கறையுடன் கேட்டறிந்தார்.
தனது பிறந்தநாளை சமூக அக்கறையுடன் கொண்டாடிய இந்தச் செயல், அருண் விஜய்யின் வாழ்க்கையில் ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது. விரைவில், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெட்ட தல' திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.