ஒட்டன்சத்திரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்த சிவசக்தி என்பவரின் மனைவி லாவண்யா (25) பி.காம் படித்து விட்டு வீட்டில் இருந்தபடியே
எம்.காம் படித்துக் கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் தனது நகையை அடமானம் வைத்தும், தோழிகளிடமும் ரூபாய் 5 லட்சம் வரை கடன் வாங்கி கணவருக்கு தெரியாமல் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே பணம் திருப்பி செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்தவர் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மேலும் இவர் மும்பையைச் சேர்ந்த ஒரு வங்கிக் கணக்கிற்கு தொடர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளார்.