பிரபல மென்பொருள் நிறுவனமான 'ஜோஹோ'வின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இளைஞர்கள் 20 வயதிற்குள் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தான் சந்திக்கும் இளம் தொழில்முனைவோர்கள் - அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் - அவர்களுக்கு ஒரு முக்கியமான அட்வைஸை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
"நான் சந்திக்கும் இளைய தொழில்முனைவோர்களிடம், 20 வயதிற்குள் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், தள்ளிப் போடக்கூடாது என அட்வைஸ் வழங்குகிறேன். அவர்கள் சமூகத்திற்கும், அவர்களின் சொந்த மூதாதையர்களுக்கும் தங்களுடைய மக்கள்தொகைக் கடமையைச் செய்ய வேண்டும் என்று நான் அவர்களிடம் சொல்கிறேன்."
மேலும், இந்தப் கருத்துக்கள் பலருக்கு விசித்திரமானதாகவோ அல்லது பழமையானதாகவோ தோன்றலாம் என்பதைத் தாம் அறிவதாகவும், ஆனால் இந்த கருத்துக்கள் விரைவில் மீண்டும் சமூகத்தில் எதிரொலிக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.