Bigg Boss 9 Tamil : அரோரா மட்டும் நெனச்சுருந்தா.. பார்வதி செஞ்ச கீழ்த்தரமான செயல்.. இது ஆபாச குறியீடு பிரச்சனைக்கும் மேல..
Tamil Minutes November 20, 2025 03:48 AM

Parvathy Controversy Speech : பிக் பாஸ் வீட்டிற்குள் சுவாரஸ்யம் மிக மிக குறைவாக இருந்து வரும் நிலையில் எப்போதாவது ஏதாவது ஒரு பெரிய சர்ச்சை உருவாகி பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக டாஸ்க் நடுவே திவாகரை நோக்கி ஆபாச குறியீடை அரோரா காண்பித்ததாக பார்வதி குற்றம் சாட்டியிருந்தார். அனைத்து போட்டியாளர்கள் முன்பும் அரோராவை மிக கேவலமாக சித்தரித்து அசிங்கப்படுத்தியிருந்தார் பார்வதி.

தொடர்ந்து விஜய் சேதுபதி தோன்றிய சமயத்தில் இதைப்பற்றி கேள்வி எழுப்பியதுடன் மட்டுமில்லாமல் பார்வதியிடம் எப்படி அது உங்கள் பார்வையில் தவறாக தெரிந்தது என்றும் அது உங்களுடைய பார்வை என்றால் மற்றவர்களை வரவைத்து அரோராவை அசிங்கப்படுத்தியது மிகப்பெரிய தவறு என்றும் சுட்டிக்காட்டியதுடன் பார்வதி தலைகுனிந்து நிற்கும் அளவிற்கு அவர் பேசியிருந்தார்.

பார்வதியின் மோசமான செயல்..

டாஸ்க் நடுவே செய்த ஒரு விஷயத்தை ஆபாச குறியீடு என திவாகர் மற்றும் பார்வதி ஆகிய இருவரும் சுட்டிக்காட்டியது அரோராவை மிகப்பெரிய அளவில் பாதித்திருந்தது. அப்படி ஒரு சூழலில் தான், சில நாட்களுக்கு முன்பாக பிக் பாஸ் வீட்டில் தன்னை பற்றி எப்படி மனது வேதனைப்படும் வகையில் பார்வதி பேசினார் என்பது பற்றியும் அதனால் அந்த நேரத்தில் தான் எப்படி இருந்தேன் என்பது பற்றியும் அரோரா சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இது தொடர்பாக பார்வதியிடமே பேசும் அரோரா, “முன்னாடி ஒரு தடவ FJ எந்திரிச்சு போகும் போது இங்கயே இருடான்னு நான் சொன்னேன். அப்போ என்னை பாத்து நீ எதோ சொன்னே. அப்போ நான் உன்கிட்ட, ‘உனக்கு மட்டும் அவர் கூடவே இருக்கார்ல’ன்னு நான் திவாகரை குறிப்பிட்டு சொன்னேன். அது நான் Relationship-ன்னு குறிப்பிட்டு சொல்லல.

உனக்கு அவரு சப்போர்ட்டா, அவருக்கு நீ சப்போர்ட்டா இருக்கேன்னு சொன்னேன். ஆனா அப்ப நீ கத்தி என்ன சொன்னே தெரியுமா?. ‘ஆமா நீ எல்லாரோடயும் தான் இருக்கே..’ அப்படின்னு சொன்னே. அது எவ்ளோ மோசமான வார்த்தை” என அரோரா சொன்னதும், ‘நான் எப்போ அப்டி சொன்னேன்?.. Defense க்கு கூட்டிட்டு வந்துடுவீங்களா அப்படின்னு தான் Mean பண்ணி சொல்லிருப்பேன். தப்பா சொல்லிருக்கமாட்டேன்’ என மறுக்கிறார்.

அரோரா மட்டும் நினைச்சுருந்தா..

ஆனால், அப்போது உடனிருக்கும் கம்ருதீனும் பார்வதி அப்படி சொன்னதாக வழிமொழிகிறார். இதன் பின்னர் பேசும் அரோரா, ‘அது எவ்ளோ Offensive ஆன வார்த்தை. நான் நெனச்சுருந்தா அதை பெரிய பிரச்சனை ஆக்கியிருக்கலாம். ஆனா அதை விட அப்போ நான் வேற ஒரு வேலைல என்னை நிரூபிக்க வேண்டியது இருந்துச்சு..’ என சொல்கிறார் அரோரா.

இதற்கு மத்தியில் பார்வதியிடம் பேசும் கம்ருதீன், ‘நீ விளையாட்டா சொன்னாலே எவ்ளோ வேதனைப்படுறே. அதுக்காக தான் கேக்குறோம்’ என்கிறார். ஒன்றுமே இல்லாததற்கு ஆபாச குறியீடு என ஒட்டு மொத்த பிக் பாஸ் வீட்டையும் கூட்டி அரோராவை அசிங்கப்படுத்தி இருந்தார் பார்வதி. ஒருவேளை அரோரா சொன்னது போல அப்போதே அவர் பெரிய பிரச்சனை ஏற்படுத்தி இருந்தால் நிச்சயம் பார்வதி தன் மீது தவறில்லை என்று தான் மோசமாக நடந்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ajith V

நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

Author: Ajith V

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.