கர்ப்பகால நாட்கள் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணுக்கு (Pregnant women) மகிழ்ச்சி நிறைந்தவையாக இருப்பது முக்கியம். கர்ப்பிணிப் பெண்கள் நல்ல உணவை உட்கொள்வதோடு மன அழுத்தமில்லாமல் (Mental Pressure) இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள், ஏனெனில் இவை அனைத்தும் தாயை மட்டுமல்ல, கருப்பையில் வளரும் குழந்தையையும் பாதிக்கின்றன. தாய் ஆரோக்கியமாக இருந்தால், குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் தாயின் உடல் மட்டுமல்ல, மனநிலையும் நன்றாக இருக்க வேண்டும். இதனால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். இந்தநிலையில், கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து மருத்துவர் நான்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ALSO READ: கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டுமா? மருத்துவர் ஸ்வாதி நேதாஜி டிப்ஸ்!
கர்ப்பகாலத்தில் என்ன செய்யலாம்..?சரியான நேரத்தில் சரியான உணவு:
View this post on Instagram
A post shared by Nancy Kurian (@drnancys.healtalks)
கர்ப்ப காலத்தில் சரியான நேரத்தில் சீரான மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். பருவகால பழங்கள், தானியங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், புரதம் மற்றும் பிரஷான காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்து கொள்வது முக்கியம். சரியான நேரத்தில் தாய் எடுத்துகொள்ளும் உணவிலிருந்து குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொடுக்கும். இது இருவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும்.
மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுதல்:கர்ப்ப காலத்தில் பெண்கள், நீங்கள் பரிசோதிக்கும் மருத்துவர் கூறும் அறிவுரை மற்றும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள். தொடர்ந்து பரிசோதனைகள், தடுப்பூசிகள், உணவு அட்டவணைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த விஷயங்களை தவிருங்கள்:ஒரு தாயின் மனநிலை மோசமாக இருந்தால் வளரும் குழந்தையை பாதிக்கிறது. நெகட்டிவான விஷயங்கள் நடந்தால், அதை புறக்கணித்துவிட்டு எல்லா சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியாக இருங்கள். இந்த நேரத்தில் தேவையில்லாத பொழுதுபோக்கு விஷயங்களை தவிர்த்து, நல்ல இசையை கேளுங்கள். செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து, நல்ல ஆர்வமுள்ள புத்தகங்களை படிக்கலாம்.
ALSO READ: கர்ப்ப காலத்தில் இளநீர் குடிப்பது குழந்தையை அழகாக்குமா? உண்மை என்ன..?
லேசான உடற்பயிற்சி:கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க உடற்பயிற்சி அவசியம். இந்த நேரத்தில், கர்ப்பிணிப் பெண்கள் கடுமையான உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும். உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறிய வீட்டு வேலைகளைச் செய்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எந்த வேலையிலும் அவசரப்படுவதைத் தவிர்க்கவும். காலையிலும் மாலையிலும் தவறாமல் யோகா மற்றும் தியானத்தைப் பயிற்சி செய்வது நல்லது.