நடிகரும், இசையமைப்பாளரும், திரையுலகின் பிரபல நகைச்சுவை நட்சத்திரருமான பிரேம்ஜி, ‘முரட்டு சிங்கிள்’ என தன்னைச் சிரித்தபடி கூறி வந்தவர். ஆனால் கடந்த ஆண்டு அவர் சேலத்தைச் சேர்ந்த இந்துவை திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சென்னை 28 உள்ளிட்ட பல படங்களில் கலாட்டாவை கிளப்பிய பிரேம்ஜி, இசையமைப்பாளராகவும் ரசிகர்களிடம் தனித்த இடத்தைப் பெற்றவர். சமீபத்தில் வெளியான கோட் படத்திலும் அவர் நடித்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு பிரேம்ஜி–இந்து தம்பதியருக்கு கடந்த மாதம் வளைகாப்பு நடந்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை இந்துவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குடும்பத்திலும், ரசிகர்களிடமும் வாழ்த்துச் செய்திகள் குவிந்து வருகிறது. “முரட்டு சிங்கிள்” என தன்னைப் போற்றிய பிரேம்ஜி, இப்போது அதிகாரப்பூர்வமாக அப்பாவாகி மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!