ஆர்சிபியை வாங்க ஆர்வம் காட்டும் காந்தாரா தயாரிப்பு நிறுவனம்!
Dinamaalai November 20, 2025 12:48 AM

 

 

ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை (RCB) விற்பனை செய்ய உரிமையாளர்கள் முனைவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அணியின் மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.17,000 கோடி) வரை உயரக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கேஜிஎஃப், கந்தாரா போன்ற வரவேற்பு பெற்ற படங்களைத் தயாரித்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ், ஆர்சிபி அணியை வாங்க ஆர்வம் காட்டுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

கடந்த ஜூன் 3இல் அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி, 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்சிபி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அதனைத் தொடர்ந்து நடந்த பெங்களூரு வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேரின் உயிரிழப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அணி உரிமை மாற்றம் குறித்த தகவல்கள் மேலும் கவனம் ஈர்க்கின்றன.

டியாஜியோவின் தலைமையில் உள்ள யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் ஆர்சிபி அணியின் பகுதி அல்லது முழு பங்குகளை விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 2008இல் விஜய் மல்லையா வாங்கிய அணியை பின்னர் டியாஜியோ கைப்பற்றியது. அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் உரிமை மாற்றம் குறித்து முடிவு எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நேரத்தில், 2023 முதல் ஆர்சிபியின் டிஜிட்டல் பார்ட்னராக உள்ள ஹொம்பாலே ஃபிலிம்ஸ் அணியை வாங்கப் போவதாக வரும் செய்தி ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.