லக்னோ தாக்கூர்கஞ்ச் பகுதியில் நடந்த இந்த விபத்து அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தந்தைக்கு உணவு எடுத்துச் செல்ல வீட்டில் இருந்து வெளியேறிய 4 வயது ஹஸ்னைன் சாலையை கடக்கும்போது, நகராட்சியின் LSA நிறுவனத்தைச் சேர்ந்த சாலை துப்புரவு வாகனம் திடீரென அவர் மீது மோதியது.
விபத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சிறுவனின் ஒரு கால் நசுங்கி சதைத் துண்டுகள் சாலையேங்கும் சிதறிக் கிடந்தன. அருகிலிருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்தபோது, வாகன ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச்சென்றிருந்தார். இந்த நிலையில் கூட்டம் சீற்றம் அடைய, போலீசார் வந்து நிலைமையை சமாதானப்படுத்தி, சம்பந்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹஸ்னைனின் காலை மீட்க முடியாது, அதை துண்டிக்க வேண்டிய நிலை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பரிதாப சம்பவம் தாக்கூர்கஞ்ச் பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!