தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நேரு விளையாட்டரங்கில் உள்ள ஒலிம்பிக் அகாடமியில் 28 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹோம் ஆப் செஸ் அகாடமியை திறந்து வைத்து வீரர்களுடன் செஸ் விளையாடினார்.
அதனை தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட ரோலர் ஸ்கேட்டிங் மையத்தினை திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கில் ரூ 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாரா பேட்மிட்டன் அகாடமியை திறந்து வைத்து வீரகளுடன் விளையாடினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் தமிழ்நாடு விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
குகேஷ் உலக சாம்பியன் பட்டம் பெற்ற நேரத்தில் தமிழகத்தில் உள்ள செஸ் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஹோம் ஆப் செஸ் அக்காடமி அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்த நிலையில் அதனை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்,மகளிர் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர்த்தி தலைமையிலான குழுவினர் செஸ் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ள வீரர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.