சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய வந்த மருத்துவக் கல்லூரி மாணவி, பொதுமக்கள் நிறைந்த இடத்திலேயே பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஆயுர்வேத கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படிக்கும் 21 வயது மாணவி, கோயிலுக்கு வந்தபோது, ஒரு ஆண் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்ததாக அவர் காவல்துறைக்கு தெரிவித்தார்.
சாமி தரிசனம் செய்யும் நேரத்தில், அந்த நபர் மாணவியிடம் தவறான நோக்கத்தில் உரசியதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த மாணவி எதிர்த்து கேட்டபோது, “இப்படித்தான் செய்வேன்… உன்னால் முடிந்ததை செல்” என்று மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றதாக புகார் கூறினார். மனவருத்தம் அடைந்த அவர், உடனே மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் பி.என்.எஸ் சட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றத்தில் ஈடுபட்டவர் தமிழக நகர்ப்புற மேம்பாட்டு துறையில் பணிபுரியும் ஓட்டுநர் விஜயகுமார் (48), திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் கண்டு கைது செய்தனர். கோயில்ப் பகுதிக்குள் நடந்த இந்த அத்துமீறல் சமூக வலைதளங்களிலும் பெரிய கண்டனத்தை உருவாக்கியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!