ஸ்ரீசத்யசாய்பாபாவின் நூற்றாண்டு விழா புட்டபர்த்தியில் நாளை நடைபெறவையுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ஸ்ரீசத்யசாய்பாபாவின் சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடவுள்ளார்.
ஸ்ரீசத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி பிறந்தவர. ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை மூலம் இவர் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கினார்.

புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட இலவச மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இவரது போதனைகள் மற்றும் சேவையால் ஈர்க்கப்பட்டு பக்தர்கள் ஆகி வருகின்றதோடு, பல்வேறு சேவைகளையும் செய்து வருகின்றனர்.
ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியநிலையில் வரும் 24-ஆம் தேதி வரை, புட்டபர்த்தியில் கோலாகலமாக நடக்க்கவுள்ளது. இந்த விழாவில் உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். நுாற்றாண்டு விழா கொண்டாட்டங்களில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

அதன்படி, நாளை (நவம்பர் 19) நடைபெறும் விழாவில் ஸ்ரீசத்யசாய்பாபா நினைவு தபால் தலை மற்றும் 100 ரூபாய் நாணயம் ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிடவுள்ளார். அத்துடன், 22-ஆம் தேதி சத்யசாய் நிகர்நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கள்ளார்.
மோடி வெளியிடும் 100 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோக சின்னம் பொறிக்கப்பட்டும், மறுபக்கத்தில் சத்ய சாய்பாபாவின் உருவம் பொறிக்கப்பட்டும் இருக்கும் அதில், 1926 2026 என்றும், 'சத்ய சாய்பாபாவின் ஜென்ம சதாப்தி' என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.