'அழைத்தது தனுஷ் மேலாளர் அல்ல... போலி நபர்!' - நடிகை மான்யா ஆனந்த் விளக்கம்!
Top Tamil News November 19, 2025 07:48 PM

சின்னத்திரை நடிகை மான்யா ஆனந்த், 'வானத்தைப் போல', 'அன்னம்', 'மருமகள்' போன்ற தொடர்களில் நடித்துப் பிரபலமானவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு ஒரு நபர் மெசேஜ் செய்ததாகவும், அவர் தன்னை தனுஷின் மேலாளர் 'ஷ்ரேயஸ்' என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த வாய்ப்புக்காக தனுஷுடன் 'அட்ஜஸ்ட்மெண்ட்' செய்ய வேண்டும் என்று அந்த நபர் தன்னைக் கேட்டதாகவும் நடிகை மான்யா ஆனந்த் பகிரங்கமாகப் பேசியிருந்தார்.

இந்நிலையில் தனுஷின் மேலாளர் பெயரைச் சொல்லி நடிகை மான்யா ஆனந்த் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார். "தான் நேர்காணலில் தனுஷின் மேலாளர் ஷ்ரேயஸ் என்று கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், போலி நபராக இருக்கலாம் எனவும் தான் தெரிவித்து இருந்தேன். தனுஷின் மேலாளர் என்று திட்டவட்டமாக தான் குறிப்பிடவில்லை என மான்யா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். எனவே யாரும் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்" எனவும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.