தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கான ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இந்த ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான (BLO) ஊதியம்: இதற்கு முன்னர் மாதம் ஒன்றுக்கு ரூ.6,000 ஆக இருந்தது, தற்போது இரு மடங்காக உயர்த்தி ரூ.12,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலர்கள் அடிப்படை தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் ஆவர்.
வாக்காளர் பட்டியலில் பிழையின்றி திருத்தம் மேற்கொள்ளும் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1,000 லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான மாத ஊதியம் ரூ.12,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்தல் பணியாளர்களின் உழைப்பை கௌரவிக்கும் விதமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணை, தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. தேர்தல் பணிகளை மேலும் திறம்பட செய்ய இந்த ஊக்கத்தொகை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva