இன்று நடிகை நயன்தாரா தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். நேற்றிலிருந்தே அவருடைய ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை பதிவிட்டு நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஆனால் முன்பு போல அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி தமிழில் வாய்ப்புகள் வரவில்லை.
ஆனால் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிஸியாக இருக்கிறார் நயன். இன்று அவருடைய பிறந்த நாள் என்பதால் அவர் நடிக்கும் புதுபடத்தில் அவருடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன் திரிஷாவை கோலிவுட்டின் இளவரசி என அனைவரும் வர்ணித்து வந்தனர். அதற்கு காரணம் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் ஒரு அழகு பதுமையாக நடித்திருந்தார்.
இப்போது அவரையே மிஞ்சும் அளவுக்கு கிட்டத்தட்ட ஜான்சிராணி மாதிரியான ஒரு கேரக்டரில்தான் தெலுங்கில் அந்த புது படத்தில் நடிக்கிறார் நயன். அந்தப் பட நிறுவனம் நயனின் போஸ்டரை வெளியிட்டு நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். அதில் பாலகிருஷ்ணாதான் ஹீரோ. ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து சிம்ஹா, ஸ்ரீராமராஜ்ஜியம் மற்றும் ஜெய் சிம்ஹா போன்ற படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர்.
இந்த மூன்று படங்களுமே அவர்களுக்கு பெரிய அளவில் வெற்றியை தந்திருக்கிறது. அடுத்ததாக என்பிகே111 என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு பவர்ஃபுல் சாம்ராஜ்யத்தின் ராணியாக நடிக்கிறார் நயன்தாரா. இது சம்பந்தமான வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த படத்தை வெங்கடசதீஷ் என்பவர் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே ராம் சரண் நடிக்கும் பெடி படத்தை தயாரித்தவர். படத்தின் இயக்குனர் கோபிசந்த். பாலகிருஷ்ணா தற்போது அகாண்டா 2 படத்தின் புரோமோஷனில் மிகவும் பிஸியாக இருக்கிறார். நயனுக்கு இந்தப் படத்தின் போஸ்டர்தான் சரியான பிறந்த நாள் பரிசாக இருக்கும் என்பது அந்தப் படத்தின் போஸ்டரை பார்க்கும் போதே தெரிகிறது.