குஜராத் மாநிலம், ஆரவல்லி மாவட்டத்தில் மோடசா பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் துயரத்தில் மூழ்கியுள்ளது. பிறந்த பச்சிளம் குழந்தையை சிகிச்சைக்காக அகமதாபாத்திற்கு ஆம்புலன்ஸில் அழைத்து சென்ற போது, நடுவழியில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்து விபத்திற்குள்ளானதில் குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குழந்தையுடன், குழந்தையின் தந்தை, டாக்டர், செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோர் சிகிச்சைக்காக அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். ஆனால் தீப்பிடித்த வேகத்தில், மிகவும் வேகமாக தீ பரவியது; உடனே மூன்று பேர் வாகனத்திலிருந்து இறங்க முயற்சித்தனர்.

இதற்குப் பின்னர், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுப்பி சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் சம்பவத்திற்கு சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்க வழக்கை பதிவு செய்துள்ளனர். தீப்பற்றிய காரணத்தை ஆராய்வதற்காக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!