குளிர்காலத்தில் அதிகரிக்கும் காது வலி ... கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!
Dinamaalai November 20, 2025 11:48 AM

 

டிசம்பர் மாதம் குளிர்காலம் உச்சத்தை எட்டினாலும், அக்டோபர் முதல் பிப்ரவரி வரை குளிர்ந்த காற்று வீசுவதால் உடல் நலப் பிரச்சினைகள் அதிகரிக்கும். குறிப்பாக முதியவர்களும், குழந்தைகளும் அடிக்கடி அனுபவிப்பது காது வலி. “குளிர்காலத்தில் இதெல்லாம் சாதாரணம் தான்” என்று பலர் நினைத்தாலும், கவனிக்கத் தவறினால் வலி தீவிரமடைந்து பெரிய பிரச்சினைகளாக மாற வாய்ப்பு உள்ளது.

குளிர்காலத்தில் காற்றில் தூசி அதிகம் கலந்திருப்பதால் அலர்ஜி விரைவில் ஏற்படும். சளி பிரச்சினை உள்ளவர்கள் மூக்கில் நுழையும் தூசியால் யூஸ்டேஷியன் குழாயில் அடைப்பு ஏற்பட்டு காது வலி அதிகரிக்கிறது. இந்த வலி முக நரம்பை பாதித்து ‘பெல்ஸ் பால்ஸி’ எனப்படும் தற்காலிக முகத் தசை செயலிழப்புக்கும் காரணமாகலாம். அதேபோல் சைனஸ் பாதிப்பு உடையவர்களுக்கு, வறண்ட குளிர் காற்று மூக்குச் சதைகளை வீங்கச்செய்து காது வலி, தலைவலி போன்றவை ஏற்படும்.

இத்தகைய பிரச்சினைகளை தவிர்க்க, வீட்டில் இருக்கும் போது காதுகளை மூடும் குல்லா அணிவது உதவும். வெளியே செல்லும்போது காதும் மூக்கும் மூடும்வகையில் ஸ்கார்ஃப் பயன்படுத்தலாம். குளிர் காற்றால் ஏற்படும் வலிக்கு நீராவி பிடிப்பது சிறந்த நிவாரணம் தரும். வலி தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம். குளிர் காற்றின் தாக்கத்தால் யூஸ்டேஷியன் குழாய் மூடப்பட்டு, காது சவ்வில் அழுத்தம் அதிகரிப்பதே காது வலியின் முக்கிய காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.