பொதுவாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம் .இந்த தூக்கத்தால் மறுநாள் உடல் உற்சாக மடைகிறது .தூக்கத்தினால் நம் மூளைக்கு கிடைக்கும் பலன்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக நாள் முழுவதும் வேலை செய்த உடல் சில மணி நேரங்கள் தொடர்ந்து ஓய்வெடுப்பதால் மறுபடி உறுப்புகள் புத்துணர்ச்சி பெற்று மறு நாள் தன் கடமைகளை சரிவர பணியாற்ற இயலும்.
2.ஆகவே ஓர் மனிதனுக்கு தினமும் 6-8 மணி நேர தூக்கம் உடலுக்கு அவசியம் தேவை.
3.ஆரோக்கியமான உடலுக்கு மட்டும் அல்ல. ஆரோக்கியமான மூளைக்கும் தூக்கம் அவசியம்.
4.மூளை தன்னைத்தானே மாற்றி கொள்ளவும் மறு சீரமைப்பு செய்து கொள்ளவும், தூக்கம் உதவுகிறது.
5.மூளையின் அணுக்களின் ஒரு பகுதியை டென்ரிட் என்ற ஒருங்கு முனைப்பு பகுதி என்று கூறுவர்.
6.இந்த பகுதி புதிய தகவல்களை சேமித்து வைக்கும் இடமாகும். இந்த பகுதியில் உள்ள தகவல்களை மட்டும் தனியாக எடுத்து பதிவு செய்து பரிசோதனைக்கு உட்படுத்தும் செயலை கட்டிங் எட்ஜ் டெக்னீக் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
7.இந்த பரிசோதனை ஞாபக சக்தி மற்றும் படிப்பதில் கோளாறு உள்ளவர்களுக்கு , புதிய வழிகளை கண்டுபிடித்து அவற்றிற்கு தீர்வுகள் காண உதவும்.
8.ஒருங்கு முனைப்பு பகுதியின் செயலாற்றல் தூங்கும்போது சிறப்பாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
9. ஞாபக சக்தி அதிகரிக்க தேவையான மூளையின் அலைகளுடன் இந்த ஒருங்குமுனைப்பு பகுதியின் அதிவேக செயலாற்றல் இணைக்கட்டுள்ளதாக தெரிவிக்கிறது இந்த ஆய்வு .