மும்பையைச் சேர்ந்த 'டெசர்ட் தெரபி' என்ற பிரபலமான பேக்கரியில், அதிதி சிங் என்ற பெண் ₹2,500 மதிப்புள்ள 'ஆல்மண்ட் பிரலைன் ஸ்ட்ராபெர்ரி டார்க் சாக்லேட்' ஒன்றை சொமேட்டோ மூலம் ஆர்டர் செய்துள்ளார்.
டெலிவரி செய்யப்பட்ட பிறகு, அந்த உணவு முழுவதும் சேதமடைந்துவிட்டதாகக் கூறி, 1,820 ரூபாயை திருப்பி தருமாறு புகார் அளித்துள்ளார். தனது புகாருக்கு ஆதாரமாக புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
அந்தப் புகைப்படத்தைக் கண்ட பேக்கரி நிர்வாகத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆராய்ந்து பார்த்ததில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலி புகைப்படம் என்பது தெரியவந்ததுள்ளது.
cake REP Image
அந்தப் புகைப்படத்தில் கேக்கின் மேலிருந்த பிறந்தநாள் வாழ்த்து அட்டையில் 'Happy Birthday' என்பதற்குப் பதிலாக 'Appy Birthda' என்று எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த கேக்கின் புகைப்படமும் பளபளவென இருந்ததை பேக்கரி நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
டெசர்ட் தெரபி நிறுவனம், தனது சமூக ஊடகப்பக்கத்தில் இந்த மோசடி குறித்து பதிவிட்டிருக்கிறது.
அதில், "வாடிக்கையாளர்களிடமிருந்து இதுபோன்ற பல புகார்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். ஆனால், AI தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்றது இதுவே முதல்முறை, இது மிகவும் வருத்தமளிக்கிறது. எங்கள் மீது இருக்கும் சிறிய தவறுகள் கூட குற்றச்சாட்டுகளாக வைக்கப்படுகின்றன.
ஆனால் வாடிக்கையாளர்கள் செய்யும் இதுபோன்ற தவறுகளைச் சுட்டிக்காட்ட முடியவில்லை" என்று டெசர்ட் தெரபி நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.
Zomato: Notification மூலம் வாடிக்கையாளரை கவரும் சோமேட்டோ- பின்னாலிருக்கும் தொழில் ரகசியம் தெரியுமா?View this post on Instagram