தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு பாத்திரங்களில் நடித்துள்ள ரவி மோகன், உலகக் குறை பிரசவ தினத்தை முன்னிட்டு குரோம்பேட்டை ரோலா மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உருக்கமாக பேசினார். குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிகழ்ச்சியில், குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் அவமானப்படவேண்டியதில்லை என்றும், மருத்துவர்கள் கூறும் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் ரவி மோகன் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ரவிமோகனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதே நேரத்தில், ரவி மோகன் தனது அடுத்த படங்கள் மற்றும் பராசக்தி திரைப்படம், ஜீனி உள்ளிட்ட புதிய தயாரிப்புகளை பற்றிய தகவல்களையும் பகிர்ந்தார். அவரது பேச்சு சமூகத்தின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், குறை பிரசவத்தை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!