பெங்களூரு: ATM-க்கு வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.7.11 கோடி கொள்ளை - என்ன நடந்தது? சந்தேகம் என்ன?
Vikatan November 20, 2025 05:48 PM

நேற்று பெங்களூரில் பட்டப்பகலில் ஏ.டி.எம்மிற்கு எடுத்து சென்ற ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

சி.எம்.எஸ் இன்ஃபோ சிஸ்டம் என்னும் கம்பெனியின் வாகனம் பெங்களூரு ஜே.பி நகரில் உள்ள தனியார் வங்கியிலிருந்து ஏ.டி.எம்மிற்கு பணம் எடுத்து சென்று கொண்டிருந்திருக்கின்றது.

அந்த வாகனத்தை ஒரு கார் வந்து இடையில் மறித்துள்ளது. அந்தக் காரில் வந்திறங்கிய நபர்கள் தங்களை இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் என்று அடையாளப்படுத்தி உள்ளனர்.

பின்னர், அவர்கள் பணத்திற்கான ஆவணங்களை ஆராய வேண்டும் என்று வாகனத்தில் பணத்திற்கான இன்சார்ஜாக வந்தவரை தங்களது காரில் பணத்துடன் ஏற்றியுள்ளனர்.

குறிப்பிட்ட இடத்தை நோக்கி சென்ற அவர்கள், அந்த இடம் வந்ததும் இன்சார்ஜை தள்ளிவிட்டு, பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர்.

பெங்களூரு - கொள்ளை மனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? - 90-களில் நேர்ந்த கொடூரம்! விசாரணை

தற்போது இந்த சம்பவத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்காக சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் டிரைவர், இரண்டு பாதுகாப்பு காவலர்கள், இன்சார்ஜ் ஆகியோர் கஸ்டடியில் எடுக்கப்பட்டுள்ளனர்.

இன்சார்ஜிடம் இருந்து காரில் இருந்தவர்கள் குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு இவர்களோ அல்லது நிறுவனத்திற்குள் இருக்கும் யாராவதோ காரணமாக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.

காரணம், இந்த சம்பவம் நடந்த உடனே அந்த வாகனத்தின் ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. மேலும், அவரிடம் விசாரிக்கையில் முற்றிலும் மாறான தகவலை தந்திருக்கிறார்.

அடுத்ததாக, ஆயுதம் ஏந்திய பாதுகாவலர் சம்பவத்தின் போது, ஏன் ஆயுதத்தைப் பயன்படுத்தவில்லை என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

US: ரூட்டை மாற்றுகிறாரா ட்ரம்ப்? H-1B விசா, வெளிநாட்டு மாணவர்களுக்கு திடீர் ஆதரவு!
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.