பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணம் உயர்வு!
Dinamaalai November 20, 2025 05:48 PM

 

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைய வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் (Fitness Certificate) கட்டணத்தை உயர்த்தியுள்ளது. பொதுமக்கள் பழைய வாகனங்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கனரக சரக்கு லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.3,500–ரூ.25,000, நடுத்தர வாகனங்களுக்கு ரூ.20,000, கார்களுக்கு ரூ.10,000–ரூ.15,000 மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.600–ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய போக்குவரத்து அமைச்சகம் பழைய வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணங்களை ஏற்கனவே அதிகரித்திருந்தது. இதையொட்டி, தில்லி தேசிய தலைநகரில் 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட டீசல் மற்றும் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பெட்ரோல் வாகன உரிமையாளர்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.