கோலிவுட்டில் உள்ள முக்கிய நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். ஒரு கட்டத்தில் இவரின் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியாகி அங்கும் நல்ல வசூலை பெற்றது. எனவே சூர்யாவின் திரைப்படங்கள் தொடர்ந்து தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. இதன் காரணமாக ஆந்திராவிலும் இவருக்கு என தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
சிங்கம், சிங்கம் 2 போன்ற திரைப்படங்கள் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. ஆனால் அதன்பின் வெளியான படங்கள் சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் படங்களாக அமையவில்லை.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான கங்குவா திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகள் இடையே வெளியானாலும் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. நெகட்டிவ்வான விமர்சனங்கள் வந்ததால் இந்த படம் தோல்வியடைந்தது. அதன்பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடித்த ரெட்ரோ படம் சுமாரான வெற்றியை பெற்றது.
அதன்பின் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற படத்தில் நடித்தார் சூர்யா. ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருந்த நிலையில் படம் நின்று போனது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு படத்திற்கு பின் தெலுங்கு சினிமா இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தொடங்கினார் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருக்கிறது. இந்த படத்தை முடித்துவிட்டு மலையாளத்தில் திரில்லர் படங்களை இயக்கி வரும் ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. பல வருடங்களுக்கு பின் மீண்டும் இந்த படத்தில் காக்கி சட்டை போடுகிறார் சூர்யா. ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.
இந்த படத்தை முடித்த பின் தெலுங்கு பட இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போகிறாராம். விவேக் ஆத்ரேயா தெலுங்கில் 4 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். நானியை வைத்து 2 படங்களை கொடுத்திருக்கிறார். இவர் சமீபத்தில் சொன்ன கதை சூர்யாக்கு பிடித்த போனதால் அவரின் இயக்கத்தின் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி தெலுங்கு, மலையாள சினிமா இயக்குனர்களோடு பயணிக்க தொடங்கி இருக்கிறார் சூர்யா.
இனிமேல் தமிழ் சினிமா இயக்குனர்களை நம்பி பலனில்லை என முடிவெடுத்து விட்டாரோ என்னவோ!..