சென்னையில் அதிர்ச்சி... கபாலீஸ்வரர் கோயிலுக்குள் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை!
Dinamaalai November 20, 2025 03:48 PM

தமிழகத்தில் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கோயிலுக்குள்ளும் பாலியல் சில்மிஷங்கள் அதிகரித்து வருவது பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயிலில், சாமி தரிசனம் செய்ய வந்திருந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவருக்கும், கூட்டம் அதிகமாக இருந்த நிலையிலும், பக்தர்கள் நிறைந்த இடத்திலேயே ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி அருகே தனியாருக்கு சொந்தமான ஆயுர்வேத கல்லூரி ஒன்றில் 4ம் ஆண்டு படித்து வரும் மாணவி(21) ஒருவர், நேற்று கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்திருந்த நிலையில், அவரைப் பிந்தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்த ஆண் ஒருவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக மாணவி காவல்துறைக்கு  தகவல் தெரிவித்தார்.

சாமி தரிசனம் செய்துக் கொண்டிருந்த நேரத்தில், அந்த நபர், மாணவியிடம் தவறான நோக்கத்தில் உரசியதாகவும், பாலியல் தொல்லை தந்ததாகவும் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து அவரிடம் எதிர்த்து கேள்வி கேட்டபோது, “இப்படித் தான் செய்வேன். உன்னால் முடிந்ததை செய்” என்று மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றதாக புகாரில் மாணவி தெரிவித்திருந்தார். 

மாணவி அளித்திருந்த புகாரின் பேரில், போலீசார் பி.என்.எஸ் சட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றத்தில் ஈடுபட்டவர் தமிழக நகர்ப்புற மேம்பாட்டு துறையில் பணிபுரியும் ஓட்டுநர் விஜயகுமார் (48) என்பதையும், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் என்பதையும் அடையாளம் கண்ட போலீசார், அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.