பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இந்தக் கூட்டணியில் உள்ள வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது.
அப்போது ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான நிதிஷ் குமார் மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற தலைவராகவும் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
வியாழக்கிழமையன்று பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.
பீகார் முதலமைச்சராக 10-வது முறையாக நிதிஷ்குமார் பதவி ஏற்கவுள்ளார். இதே போலச் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதலமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.