சமூக ஊடகங்களில் தற்போது பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதும் ஒரு விசித்திரமான வீடியோ வைரலாகி வருகிறது.
தேர்வு அறையில் மாணவர்கள் ஒருவர் மற்றவரிடம் பேசவோ, பார்க்கவோ முடியாதபடி, மிக அதிக அளவில் விலகி, தனித்தனியாக அமர்ந்திருப்பது அந்த வீடியோவில் காணப்படுகிறது. கழுத்தைத் முழுவதுமாகத் திருப்பினால் கூடப் பக்கத்தில் இருப்பவரைப் பார்க்க முடியாத அளவுக்கு, இவ்வளவு கடினமான தேர்வு முறையை இதற்கு முன் பார்த்ததில்லை என்று நெட்டிசனன்கள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
A post shared by Pintu Ramgarh (@pintuwriter07)
“>
இந்தப் பதிவைப் பார்த்த பலர், “இது UPSC தேர்வா?” என்று நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஏற்பாடு ஏமாற்றுவதைத் தடுக்க ஒரு சிறந்த வழி என்று சில பயனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ‘pintuwriter07’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை 67,000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.