கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ‘நிராகரித்துவிட்டது’ என்ற தகவல் நேற்று முதல் பரவியிருந்தது.
கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ‘நிராகரித்துவிட்டது’ என்ற தகவல் நேற்று முதல் பரவியிருந்தது. குறிப்பாக, தமிழகத்தின் முன்னணி ஊடகங்களான The Hindu, Business Line மட்டுமல்ல, முன்னனி தொலைக்காட்சிகளும் ஒட்டுமொத்தமாக இதை ‘நிராகரிப்பு’ என்றே செய்தி வெளியிட்டன. ஆனால், அது நிராகரிப்பு அல்ல, சில தொழில்நுட்ப விளக்கங்கள் தேவையெனக் கூறி மத்திய அரசு DPR-ஐ திருப்பி அனுப்பியுள்ளது
கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான DPR-களை பல்வேறு தொழில்நுட்ப குறைகள் காரணமாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் திருப்பி அனுப்பியுள்ளது. சராசரி பயண வேகம், தினசரி பயணிகள் கணிப்பு, சாலை அகலம் மற்றும் பொருளாதார மதிப்பீடு உள்ளிட்ட முக்கிய தரவுகள் துல்லியமற்றவை என கடிதம் குறிப்பிடுகிறது. மேலும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இரு நகரங்களும் மெட்ரோ ரெயில் கொள்கை தகுதிக்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகையை எட்டவில்லை என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது. கடிதம் முடிவில், ‘In view of the above, DPRs of Coimbatore Metro Rail Project and Madurai Metro Rail Project are returned herewith’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பு: “மேலே கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையில், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான DPR-கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.” அரசின் கடிதத்தில் ‘நிராகரிப்பு’ (rejected) என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை, ‘returned’ என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் தகவல்களை சேர்த்து மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பினால் பரிசீலிக்கப்படும் என்பதே தெரிகிறது.