விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… ஜன நாயகன் படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
TV9 Tamil News November 21, 2025 02:48 AM

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருந்தது. மேலும் இந்த படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது. தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் இந்த கேவிஎன் நிறுவனம் தமிழ் சினிமாவில் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிறுவனம் படத்தின் அறிவிப்பு வெளியான போது நடிகர் விஜய் நடிப்பில் முன்னதாக வெளியான படங்களின் காட்சிகளை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது.

நடிகர் விஜய் இனி படங்களில் நடிக்கப்போவது இல்லை ஜன நாயகன் தான் இறுதிப் படம் என்று தெரிவித்து இருந்த நிலையில் இந்த வீடியோ ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதன்படி இனி விஜய் படங்களில் நடிக்கப்போவது இல்லை என்றதால் அந்த வீடியோ ரசிகர்களை கண்கலங்க வைத்தது. இதனைத் தொடர்ந்து ஜன நாயகன் படம் தொடர்பாக வெளியான அப்டேட்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ஜன நாயகன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது படத்தின் வெளியீட்டிற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் படத்தில் இருந்து முன்னதாக தளபதி கச்சேரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் விஜயின் 33 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் விதமாக டிசம்பர் மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு அந்தப் பாடல் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வைரலாகி வருகின்றது.

Also Read… அந்த நடிகரோட டான்ஸ் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும் – நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

#JanaNayagan 🔥

– The Second Single of JanaNayagan is expected on December 4th, 33 Years Of VIJAYISM Special…❤️‍🔥
– So it going to be a Mass Elevation Song…🎶#BeastMode, #Badass & Next…⏳️💥#ThalapathyVijay #Anirudh pic.twitter.com/ptNcy5jYrT

— Movie Tamil (@_MovieTamil)

Also Read… தகாத வார்த்தைகளை பயன்படுத்திய இயக்குநர்… நடிகை திவ்ய பாரதி காட்டம்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.