தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும், திமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருபவர் துரைமுருகன் (வயது 87). துரைமுருகனுக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட காது வலி காரணமாக சென்னை காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி மையத்தில் நேற்று முன்தினம் (நவ., 18) அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் துரைமுருகனுக்கு தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திடீரென காதில் வலி ஏற்பட்டது வயது மூப்பின் காரணமாக ஏற்படும் பாதிப்பு தான் எனவும் இப்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று (நவ., 20) வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.