சென்னையில் உருவாகியுள்ள புதிய பொழுதுபோக்கு மையமான வொண்டர்லா அம்யூஸ்மென்ட் பூங்கா, டிசம்பர் 1 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 2 முதல் பொதுமக்கள் பூங்காவை அனுபவிக்கலாம் என நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சுமார் 64 ஏக்கரில் 611 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட பூங்காவில் மொத்தம் 43 உலகத் தரமான ரைடுகள் அமைக்கப்பட்டுள்ளன. உயர் த்ரில் ரைடுகள், குடும்ப ரைடுகள், குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள், நீர் விளையாட்டுகள் என பல்வேறு பிரிவுகளில் சவாரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தஞ்சோரா, ஸ்பின் மில், ஸ்கை ரயில் போன்ற இந்தியாவில் எங்கும் இல்லாத புதிய ரைடுகளும் இங்கு அறிமுகமாக இருப்பது சிறப்பம்சமாகும். ஒரே நாளில் 6,500 பேரை ஏற்கும் திறனுடன் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.
வார நாட்களில் அடிப்படை டிக்கெட் விலை ரூ.1,489 (ஜி.எஸ்.டி உட்பட) என்றும், வார இறுதிகளில் ரூ.1,789 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படும். கல்லூரி மாணவர்கள் அடையாள அட்டையுடன் 20% சலுகை பெறலாம். குழு முன்பதிவுகள் மற்றும் பருவத்துக்கேற்ற சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட உள்ளன. தனிச்சலுகையாக, திறப்பு நாளான டிசம்பர் 2 அன்று டிக்கெட் விலை ரூ.1,199 ஆக குறைக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், ஷாப்பிங் மையங்கள், நிகழ்ச்சி அரங்குகள், தஞ்சாவூர் மற்றும் மரப்பாச்சி பொம்மைகளை ஊக்குவிக்கும் கைவினைப் பகுதிகள் உள்ளிட்டவை பூங்காவில் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட குழுவும் தயார் நிலையில் பணியாற்றும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!