சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, சென்னையில் தங்க நகை மற்றும் இரும்பு மொத்த வியாபாரம் செய்து வரும் தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத் துறை (இ.டி.) அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் சிஆர்பிஎப் பாதுகாப்புடன் திடீர் சோதனைகளை நடத்தினர்.
சோதனைகள் முதலில் சௌகர்பேட்டையில் உள்ள தொழிலதிபர் முத்தா வீட்டில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இரும்பு மொத்த வியாபாரி நிர்மல் குமார் வீட்டிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், கே.கே.நகர் முனுசாமி சாலை மற்றும் லட்சுமணசாமி சாலையில் உள்ள தங்க நகை வியாபாரி மஹாவீருக்கு தொடர்புடைய இடங்கள், சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தொழிலதிபர் கலைச்செல்வன் வீடு, அம்பத்தூர் திருவேங்கட நகரில் வழக்குரைஞர் பிரகாஷ் வீடு, கோடம்பாக்கத்தில் ‘சுகாலி எண்டர்பிரைசஸ்’ அலுவலகம் உள்ளிட்ட சென்னை முழுவதும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

வியாழக்கிழமை அதிகாலை வரை நீடித்த இச்சோதனைகள் தற்போது நிறைவடைந்துள்ளன. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அல்லது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து இ.டி. இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!