ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், டீசல். இந்த படத்தை ஷன்முகம் முத்துசாமி இயக்கியிருந்தார். இந்த படத்தை சன் நெஸ்ட் தளத்தில் நவம்பர் 21ஆம் தேதி 2 மணி முதல் பார்க்கலாம்.
அமேசான் ப்ரைமில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் தொடரான ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 3 நாளை வெளியாகிறது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி நடிப்பில் இதன் முந்தைய சீசன்கள் பெற்ற அதீத வரவேற்பு இந்த சீசனுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திலக் சேகர் நடிப்பில் கன்னடத்தில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Usiru'. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட மனைவியை காப்பாற்றும் கறாரான போலீஸ் அதிகாரி கணவனின் கதைக்களம். இப்படம் நாளை 21ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் 'Shades of Life'. கிராமத்தில் வாழும் வெவ்வேறு மக்களின் வாழ்க்கை பயணத்தி கூறும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை 21ம் தேதி ManoramaMax ஓடிடியில் வெளியாகவுள்ளது.
கன்னடத்தில் கடந்தாண்டு வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'Ondu Sarala Prema Kathe'. இப்படம் நாளை 21ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
இயக்குநர் எம் ரமேஷ் பாரதி இயக்கத்தில் தம்பி ராமய்யா, எஸ் கே காயத்திரி நடிப்பில் உருவாகியுள்ள காமெடி, டிராமா திரைப்படம் 'முருகேசன் +2'. இப்படம் ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
நடு செண்டர் சசிகுமார் நடித்த தொடரை, ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் காணலாம்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருந்த படம், பைசன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அனுபமா நடித்திருந்தார். நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை நவம்பர் 21ஆம் தேதியில் இருந்து நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.
ட்ரீம் ஈட்டர் ஆங்கில படத்தை ப்ரைம் வீடியோவில் காணலாம். இது, ஹாரர் படமாகும்.
ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் நடித்திருக்கும் ஆஃப்டெர் தி ஹண்ட் படத்தை ப்ரைம் வீடியோவில், வாடகை சந்தா செலுத்தி காணலாம். இதில், ஜூலியா ராபர்ட்ஸ், லியோ மிஹேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.