வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை சரிந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 225 புள்ளிகள் சரிந்து 85,457 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 80 புள்ளிகள் சரிந்து 26,106 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்ஃபோசிஸ், கோடக் மகேந்திரா வங்கி, டெக் மகேந்திரா, டிரென்ட் உள்ளிட்ட ஒரு சில பங்குகள் மட்டுமே அதிகரித்து விற்பனையாகி வருகிறது என்பதும், மற்ற நிஃப்டியில் உள்ள அனைத்து பங்குகளும் சரிவில் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva