இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக 03 மாகாணங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய 03 மாகாணங்களில் இதுவரை 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரிய நிகழ்வாக மலாக்கா ஜலசந்தியில் ஏற்பட்ட சென்யார் என்ற சூறாவளி புயலால் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,003 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 218 பேர் மாயமாகியுள்ளனர். தற்போது அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அத்துடன், சீரற்ற காலநிலையினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 200-க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் மற்றும் 581 கல்வி நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.