ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி மாவட்டத்தில், பெடா பகுபுட்டூவைச் சேர்ந்த அப்பாராவ் என்ற நபரின் கோழி ஒன்று, நான்கு கால்களுடன் ஒரு விநோதமானக் குஞ்சைப் பிறப்பித்துள்ளது.
மொத்தம் நான்கு குஞ்சுகள் பிறந்த நிலையில், அதில் ஒரு குஞ்சு மட்டும் வித்தியாசமாகக் காணப்பட்டதைக் கண்டு அப்பாராவ் அதிர்ச்சி அடைந்தார். நான்கு கால்களுடன் பிறந்த இந்தக் கோழிக் குஞ்சு குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விநோதக் கோழிக் குஞ்சு தற்போது ஆரோக்கியமாக உள்ளது. ஆனால், இது மரபணுக் கோளாறு (Genetic defect) காரணமாகவே நான்கு கால்களுடன் பிறந்திருக்கலாம் என்று கால்நடை மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தக் குஞ்சைக் காண அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் திரண்டு வருகின்றனர். சிலர் இது ஒரு அதிசயம் அல்லது இறைவனின் பரிசு என்று கருதுகின்றனர்.