தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அதிமுகவில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்வை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 15) சென்னையில் தொடங்கி வைத்தார்.
மனு விவரங்கள்:
இடம்: ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம்.
நேரம்: இன்று (டிச. 15) நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் விருப்ப மனுக்களைப் பெற்றுப் பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மனு கட்டணம்:
தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகள்: ரூ. 15,000
புதுச்சேரி தொகுதிகள்: ரூ. 5,000
இதுகுறித்து அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "
புரட்சித்தலைவரின் வழியில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நூற்றாண்டு கனவு கனவை நோக்கி பயணப்படும் கழக தொண்டர் படையின் பிரம்மாண்டமே இந்தக் காட்சி!
ஒவ்வொரு தொண்டரின் இதயத்திலும் நிறைந்திருக்கும் விசுவாசமும், ஒவ்வொருவரின் முகத்திலும் தெரியும் உத்வேகமும்தான், கழகத்தின் நாளைய வெற்றிக்கான தொடக்கம்.
2026 தேர்தல் என்பது வெறும் போட்டி மட்டும் அல்ல, அது மீண்டும் மக்கள் நலன் காக்கும் நல்லாட்சியை மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நிலைநாட்ட, நாம் எடுக்கும் சபதம்!
தலைமைக் கழகத்தை நோக்கிப் பாயும் இந்தத் தொண்டர்களின் ஆரவாரம், எதிரிகளுக்கு ஒரு தெளிவான செய்தி சொல்கிறது: "நாங்கள் இன்னும் பலமாக இருக்கிறோம்! எங்கள் இலக்கு 2026-ல் அதிமுக ஆட்சி.
எழுவோம், புறப்படுவோம்! கழகத்தின் வெற்றிக்காக நாளும் உழைப்போம்!
நாமும் சேர்ந்து உழைப்போம்!
களம் நமதே!
வெற்றியும் நமதே!