கோவா தீ விபத்து: விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது, இந்தியா நாடு கடத்தல்...!
Seithipunal Tamil December 16, 2025 10:48 PM

கோவா, அர்போரா பகுதியில் உள்ள ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ இரவு விடுதியில் கடந்த 6ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சோக நிகழ்ச்சியில் விடுதி ஊழியர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.

வீடுபாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாததற்கு விடுதி மேனேஜர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட 5க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். விடுதி உரிமையாளர்கள் கவுரவ் லூத்ரா மற்றும் சவுரப் லூத்ரா தாய்லாந்துக்கு தப்பி சென்றதாக தகவல் கிடைத்தது.

இந்திய போலீசார் இண்டர்போல் உதவியுடன் தாய்லாந்து அரசுக்கு அவர்களை கைது செய்ய கோரிக்கை விடுத்தனர்.இதன் பிறகு, கடந்த 11ம் தேதி தாய்லாந்து போலீசார் கவுரவ் லூத்ரா மற்றும் சவுரப் லூத்ராவை கைது செய்து இந்தியா நாடு கடத்தினர்.

பாங்காக் விமான நிலையத்தில் இருந்து டெல்லி விமானத்தில் இந்திய அதிகாரிகளுக்கு ஒப்படைக்கப்பட்ட இருவரும், இந்திய நீதித்துறையின் நடவடிக்கைக்கு உடனே சமர்பிக்கப்பட உள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.