தவெக தலைவருமான விஜய் வருகிற 18-ஆம் தேதி ஈரோட்டில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசவிருக்கிறார். விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது அவரை காண பல ஆயிரம் மக்கள் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் வரை உயிரிழந்தனர். எனவே கடந்த இரண்டு மாதங்களாக விஜய் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை நடத்தவில்லை.
அதேநேரம், இந்த மாதம் 5ம் தேதி அவர் சேலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தார். ஆனால் தமிழக போலீசார் அனுமதிக்கவில்லை. எனவே பாண்டிச்சேரியில் தவெக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இந்நிலையில்தான் வருகிற 18ம் தேதி ஈரோட்டில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசவிருக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை சமீபத்தில் இருந்த அந்த கட்சியில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்து வருகிறார். இதற்கு பல விதிமுறைகளையும் போலீசார் விதித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. 18ம் தேதி நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வு 26 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.