2025-ம் ஆண்டில் கோலிவுட் சினிமாவில் 2025-ல் வெளியாகி IMDb-ல் அதிக ரேட்டிங்கை பெற்ற படங்கள் என்னென்ன?
TV9 Tamil News December 17, 2025 01:48 AM

பைசன் காளமாடன்: நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பைசன் காளமாடன். இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இந்தப் படம் உண்மைச் சம்பத்தை மையமாக வைத்து ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் 2025-ம் ஆண்டில் வெளியான படங்களில் 7.8 IMDb ரேட்டிங்கை பெற்றது குறிப்பிடத்தக்கது.

டூரிஸ்ட் ஃபேமிலி: இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தின் மூலமாக அபிஷன் ஜீவிந்த் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரன் இருவரும் இணைந்து நடித்து இருந்த இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து பலர் நடித்து இருந்தனர். ஃபீல் குட் பாணியில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படம் 2025-ம் ஆண்டில் வெளியான படங்களில் 7.8 IMDb ரேட்டிங்கை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… க்ரைம் ட்ராமா பாணியில் உருவான இந்த ஆர்டிகிள் 15 படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

காந்தா: நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் காந்தா. பீரியட் ட்ராமாவாக வெளியான இந்தப் படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிகர்கள் சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா டகுபதி, ரவீந்திர விஜய், காயத்ரி சங்கர், நிழல்கள் ரவி, பகவதி பெருமாள், வையாபுரி, தமிழ்செல்வி, பிஜேஷ் நாகேஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் 2025-ம் ஆண்டில் வெளியான படங்களில் 8.4 IMDb ரேட்டிங்கை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… S.A.C: விஜய்க்கு அரசியல் வர பல காரணங்கள் இருக்கலாம்…ஆனால் அதுவும் ஒரு காரணம்- எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.