ஐபிஎல் 2026 மினி ஏலம் புதன்கிழமை அபுதாபியில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் புதிய சாதனை படைத்தார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி ரூ.25.20 கோடிக்கு கைப்பற்றியது. இதன் மூலம், முந்தைய சாதனையான மிட்செல் ஸ்டார்க்கின் ரூ.24.75 கோடி தொகையை அவர் முறியடித்தார்.
மேலும், கேகேஆர் அணி இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானாவை ரூ.18 கோடிக்கு வாங்கி, ஏலத்தில் மற்றொரு முக்கியமான கையகப்படுத்துதலையும் மேற்கொண்டது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்.எஸ்.ஜி) அணியுடன் நடந்த கடும் போட்டிக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்டிருந்த வெங்கடேஷ் ஐயரின் மதிப்பு இந்த மினி ஏலத்தில் கடுமையாக சரிந்தது. அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணி ரூ.7 கோடிக்கு வாங்கியது.
இந்த தொகுப்பில் பல முக்கிய பேட்டர்கள் ஏலத்திற்கு வந்தனர். இதில் சிலர் மட்டுமே அணிகளால் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பிறகு பல வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை. அதன்படி ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட மற்றும் தேர்வு செய்யப்படாத வீரர்களின் விவரங்களை பார்ப்போம்.
பிருத்வி ஷா – விற்கப்படவில்லை
டெவோன் கான்வே – விற்கப்படவில்லை
கேமரூன் கிரீன் – ரூ.25.20 கோடிக்கு கேகேஆர் அணிக்கு விற்கப்பட்டார்
சர்ஃபராஸ் கான் – விற்கப்படவில்லை
ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் – விற்கப்படவில்லை
டேவிட் மில்லர் – டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ரூ.2 கோடிக்கு விற்கப்பட்டார் (அடிப்படை விலை)
அன்மோல்ப்ரீத் சிங் – விற்கப்படவில்லை
அபினவ் தேஜ்ரானா – விற்கப்படவில்லை
அபினவ் மனோகர் – விற்கப்படவில்லை
யாஷ் துல் – விற்கப்படவில்லை
ஆர்யா தேசாய் – விற்கப்படவில்லை
ஆல்-ரவுண்டர்கள் தொகுப்பில் பல முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு வந்தபோதும், குறைந்த எண்ணிக்கையிலேயே அணிகள் முன்வந்தன.
கஸ் அட்கின்சன் – விற்கப்படவில்லை
ரச்சின் ரவீந்திரா – விற்கப்படவில்லை
லியாம் லிவிங்ஸ்டன் – விற்கப்படவில்லை
வியான் முல்டர் – விற்கப்படவில்லை
வனிந்து ஹசரங்கா – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ரூ.2 கோடிக்கு விற்கப்பட்டார்
வெங்கடேஷ் ஐயர் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ.7 கோடிக்கு விற்கப்பட்டார்
தீபக் ஹூடா – விற்கப்படவில்லை
கே.எஸ். பாரத் – விற்கப்படவில்லை
குயின்டன் டி காக் – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.1 கோடிக்கு விற்கப்பட்டார்
ரஹ்மானுல்லா குர்பாஸ் – விற்கப்படவில்லை
ஜானி பேர்ஸ்டோவ் – விற்கப்படவில்லை
ஜேமி ஸ்மித் – விற்கப்படவில்லை
பென் டக்கெட் – டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ரூ.2 கோடிக்கு விற்கப்பட்டார்
ஃபின் ஆலன் – கேகேஆர் அணிக்கு ரூ.2 கோடிக்கு விற்கப்பட்டார்
ஆகாஷ் தீப் – விற்கப்படவில்லை
அன்ரிச் நார்ட்ஜே – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ரூ.2 கோடிக்கு விற்கப்பட்டார்
மதீஷா பதிரானா – கேகேஆர் அணிக்கு ரூ.18 கோடிக்கு விற்கப்பட்டார்
ஜெரால்ட் கோட்ஸி – விற்கப்படவில்லை
ஜேக்கப் டஃபி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ.2 கோடிக்கு விற்கப்பட்டார்
மாட் ஹென்றி – விற்கப்படவில்லை
ஸ்பென்சர் ஜான்சன் – விற்கப்படவில்லை
சிவம் மாவி – விற்கப்படவில்லை
ஃபசல்ஹாக் ஃபரூக்கி – விற்கப்படவில்லை
ராகுல் சாஹர் – விற்கப்படவில்லை
ரவி பிஷ்னோய் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.7.20 கோடிக்கு விற்கப்பட்டார்
மஹீஷ் தீக்ஷனா – விற்கப்படவில்லை
முஜீப்-உர்-ரஹ்மான் – விற்கப்படவில்லை
அகீல் ஹொசைன் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.2 கோடிக்கு விற்கப்பட்டார்
மேலும் சென்னை அணியில் முன்னதாக விளையாடிய விஜய் சங்கரையும் எந்த அணியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்