சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் சேலை அணிந்து ஆடிய நடன வீடியோ தற்போது இணையத்தையே அதிரவைத்துள்ளது. திரிபுராவைச் சேர்ந்த அங்கிதா என்ற அந்தப் பெண், ஒரு கல்லூரியின் பிரியாவிடை விழாவில் ‘மே ஹூன் நா’ திரைப்படத்தின் புகழ்பெற்ற ‘தும்சே மில்கே தில் கா ஜோ ஹால்’ என்ற பாடலுக்கு மிக நேர்த்தியாக நடனமாடியுள்ளார்.
மேலும் சேலை அணிந்திருந்த போதிலும், மிக வேகமாகவும் அழகாகவும் அவர் ஆடிய நடனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னின் நடனத்தையே மிஞ்சும் அளவிற்கு இவரது அசைவுகள் இருந்ததாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
A post shared by ANKITA !! (@ankitaaaa_official)
“>
இந்த நடன வீடியோ தற்போது புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அங்கிதாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 13 கோடிக்கும் (130 மில்லியன்) அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் 68 லட்சத்திற்கும் அதிகமானோர் இதனை ‘லைக்’ செய்துள்ளனர்.
இத்தகைய திறமை இருந்தால் எளிய உடையிலும் மேடையில் மேஜிக் செய்ய முடியும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. ஆயிரக்கணக்கான பயனர்கள் இவரது நடனத்தைப் பாராட்டி கருத்துக்களைத் தெரிவித்து வருவதால், இந்த வீடியோ தற்போது இணையத்தின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.