Indian Football: மெஸ்ஸி வருகையால் இந்தியாவில் திருவிழா.. எங்களுக்கு முதலீடு எங்கே..? இந்திய கால்பந்து கேப்டன் கேள்வி!
TV9 Tamil News December 18, 2025 11:48 PM

இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் (Indian Football Team) கேப்டன் சந்தேஷ் ஜிங்கன் லியோனல் மெஸ்ஸின் (Lionel Messi) இந்திய வருகை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்விகளை எழுப்பினார். இது சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்திய கால்பந்து நிர்வாகத்தை வெளிப்படையாக விமர்சித்த சந்தேஷ் ஜிங்கன், இந்திய கால்பந்து அணிக்காக எதுவும் செய்யப்படவில்லை என்றும், மெஸ்ஸியின் வருகைக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற அபினவ் பிந்த்ராவும் இது குறித்து கேள்விகளை எழுப்பினார்.

ALSO READ: கிளம்பிய மெஸ்ஸி.. கொல்கத்தா ஸ்டேடியத்தில் கலவரம்.. மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி!

இந்திய கேப்டன் சந்தேஷ் ஜிங்கனின் வலி:

View this post on Instagram

A post shared by Sandesh Jhingan (@sandesh21jhingan)


இந்திய கேப்டன் சந்தேஷ் ஜிங்கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்தியாவில் யாரும் கால்பந்தில் முதலீடு செய்ய தயாராக இல்லாததால், நாங்கள் ஒரு பணி நிறுத்தத்திற்கு மிக அருகில் இருப்பது போல் உணர்கிறேன். மெஸ்ஸியின் இந்திய வருகையின் சுற்றுப்பயணத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.

நமது கால்பந்து சுற்றுச்சூழல் அமைப்பு ஆபத்தில் உள்ளது. இந்திய கால்பந்து மோசமான கட்டத்தை கடந்து செல்கிறது என்பது எனக்கு கவலை அளிக்கிறது. உள்நாட்டு கால்பந்து போட்டிகள் எதுவும் இல்லாத நிலையில் நாம் இருக்கிறோம். நாங்கள் எங்கள் நாட்டிற்காக விளையாட விரும்புகிறோம். ஆனால், எங்கள் நாட்டின் வீரர்களை ஆதரிக்க முடியவில்லை என்று தெரிகிறது” என்றார்.

தொடர்ந்து அந்த பதிவில், “கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் திடீரென கால்பந்தின் உணர்வில் மூழ்கியிருப்பது என்னை என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள தூண்டியது. நம் நாடு கால்பந்தை விரும்புவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விளையாட்டுக்கும் மைதானங்கள் நிரம்பி வழியும். ஆனால், அதற்கு யாராவது அதில் முதலீடு செய்தால் மட்டுமே முடியும்” என்று தெரிவித்தார்.

ஒளிபரப்புக்கு ஆள் இல்லை..

இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து போட்டிகளான இந்தியன் சூப்பர் லீக் மற்றும் ஐ லீக் ஆகியவை தற்போது அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இல்லாமல் தவித்து வருகிறது. இது இந்த போட்டிகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாகவும் மாற்றியுள்ளது. இது இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகளையும் முன்வைக்கின்றன.

ALSO READ:90’s கிட்ஸ்களின் ஃபேவரட்.. ஓய்வு பெற்றார் WWE வீரர் ஜான் சீனா.. கண்ணீர் மல்க விடைகொடுத்த ரசிகர்கள்

மெஸ்ஸியின் கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய 3 நாள் சுற்றுப்பயணம் மிகுந்த கவனத்தை ஈர்த்தது. மெஸ்ஸியுடன் லூயிஸ் சுவாரெஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகிய அர்ஜெண்டினா வீரர்களும் உடன் இருந்தனர். இந்த உற்சாகத்தைப் பார்க்கும்போது, ​​இந்தியர்கள் கால்பந்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆனால், யாரும் தங்கள் சொந்த நாட்டு வீரர்களை ஆதரிக்க ஆர்வம் காட்டவில்லை என்று சந்தேஷ் ஜிங்கன் குற்றம் சாட்டினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.