பொதுவாக நம் ஊரில் ஏதாவது விசேஷமென்றால் நாம் மாவிலை தோரணம் கட்டுவோம் .இந்த மாவிலை தோரணத்தில் பல்வேறு மருத்துவ குணமுள்ளது .இந்த மாவிலை மூலம் பல நோய்களை குணப்படுத்தலாம் .அது பற்றி இந்த பதிவில் காணலாம்
1.பொதுவாக இலவசமாய் கிடைக்கும் மா இலைகள் .நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாக மாமர இலைகள் இருக்கிறது.
2.சிலருக்கு சுகர் அளவு குறையாமல் இருக்கும் .மாமர இலைகளில் பைட்டோகெமிக்கல் உள்ளது. இது நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
3.அதனால் மா மர இலைகளை உலர்த்தி பொடி செய்து உபயோகப்படுத்தலாம் .இப்படி பயன்படுத்தும் பொழுது நீரிழிவு நோய் குணமாகிறது
4.இந்த மாமர இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீரும் நீரிழிவு நோயிடமிருந்து நம்மை காக்கிறது .
5.மாமர இலைகளை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து விடவும் .பின்னர் காலையில் இந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கும் பொழுது நல்ல பலனைக் கொடுக்கிறது.
6.இலவசமாய் கிடைக்கும் மாமர இலைகள் உயர் ரத்த அழுத்த எதிர்ப்பு பண்புகளை கொண்டு இருப்பதால் இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
7.இலவசமாய் கிடைக்கும் மாமர இலைகள் ரத்த நாளங்களை வலுப்படுத்த உதவும்
8.இலவசமாய் கிடைக்கும் மாமர இலைகள் சேதமடைந்த நரம்புகளை ஆரோக்கியப்படுத்தவும் உதவுகிறது.
9.மாங்காய் இலைகளில் இருக்கும் மாங்கிஃபெரின் என்ற பைட்டோ கெமிக்கல் நம் உடலில் உண்டாகும் பதட்டத்தை குறைக்கிறது.
10.மேலும் மா மர இலைகள் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது